வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு


வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
x

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே பண்ணையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கி முத்து மனைவி அம்மா பொண்ணு (வயது 58) என்பவர் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப் போது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை மர்ம நபர் பறித்து செல்லும்போது செயின் இரண்டு துண்டானது. இதில் பாதி அளவு மர்ம நபர் கையிலும் மீதி அம்மா பொண்ணு வசமும் இருந்துள்ளது. இது சம்பந்தமாக அம்மா பொண்ணுவின் மகள் சுதா புகாரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story