மூதாட்டியிடம் நகை பறிப்பு
சிவகாசி அருகே மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாம்மாள் (வயது 80). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள தண்ணீர் மோட்டாரை போடுவதற்காக கீழே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் சீத்தாம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சீத்தாம்மாள் சிவகாசி டவுன் போலீஸ் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவம், நகைபறிப்பு சம்பவம் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தினாலும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. ஆதலால் குற்றப்பிரிவுக்கு கூடுதல் போலீசாரை நியமித்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.