பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு


பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு
x

பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சோமு முருகன் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழக திருமங்கலம் பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துவேல் செல்வி நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முத்துவேல் செல்வி பணிக்கு சென்று விட்டார். அதே போல் சோமு முருகனும் வீட்டை பூட்டிவிட்டு தனது 2 குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு இரவு பணிக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில், மாமனார் சுந்தர்ராஜ் தனது மருமகன் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மருமகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சோமு முருகன் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, வெள்ளிகொலுசு, ரொக்கம் ரூ.10,500 திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சோமு முருகன் டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story