ஓசூர் நகைக்கடை அதிபரிடம் ரூ.9.33 லட்சம் அபேஸ்
அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ஓசூர் நகைக்கடை பெண் அதிபரிடம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ஓசூர் நகைக்கடை பெண் அதிபரிடம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகைக்கடை அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 25). இவர் ஓசூரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 2-ந்தேதி இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் அறிமுகமானார்.
அவர் தான் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதை நம்பி சுஜித்ரா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 500 அனுப்பினார். அதன் பிறகு அந்த நபர் சுஜித்ராவிடம் பேசுவதை தவிர்த்தார். மேலும் அந்த நபர் செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதனால் சுஜித்ரா அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்த விசாரணை நடத்தி வருகிறார். நகைக்கடை பெண் அதிபரிடம் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.