சீலநாயக்கன்பட்டியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகைகள், பணம் திருட்டு


சீலநாயக்கன்பட்டியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகைகள், பணம் திருட்டு
x

சீலநாயக்கன்பட்டியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகைகள், பணம் திருட்டு போனது.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பாலாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 73). போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகைகள், ரூ.19 ஆயிரம் ரொக்கம், 55 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story