ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை-பணம் திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை-பணம் திருட்டு போனது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்த முருகேசனின் மனைவி சுப்புலட்சுமி (வயது 38). இவர் சம்பவத்தன்று கீரனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்து வந்தார். அப்போது இவரது கைப்பையை மர்மநபர் திருடிவிட்டார். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் வந்த போது கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ரூ.37 ஆயிரம் ரொக்கம், 6 கிராம் தங்கம் நகை உள்பட மொத்தம் ரூ.49 ஆயிரத்து 250 மதிப்பிலானவை இருந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை, பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story