தூத்துக்குடியில் வக்கீலிடம் நகை, பணம் பறிப்பு


தூத்துக்குடியில் வக்கீலிடம் ரூ.2 பவுன் சங்கிலி, பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வக்கீலிடம் ரூ.2 பவுன் சங்கிலி, பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வக்கீல்

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் மகராஜா (வயது 27). இவர் வக்கீலுக்கு படித்து உள்ளார். பகுதி நேரமாக பால்கடையிலும் வேலை பார்த்து வந்தாராம். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். இவர் போல்பேட்டை ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

வழிப்பறி

அவர்கள் திடீரென மகராஜாவை தாக்கி, அவரிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகள், ரூ.3 ஆயிரத்து 450 ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.92 ஆயிரத்து 950 என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ெசய்த 3 மர்ம நபர்களை ேதடிவருகின்றனர்.


Next Story