வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களிடம் நகை, பணம் திருட்டு


வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களிடம் நகை, பணம் திருட்டு
x

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களிடம் நகை, பணம் திருடப்பட்டது.

மதுரை


மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களிடம் நகை, பணம் திருடப்பட்டது.

நகை, பணம் திருட்டு

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா பானு (வயது 31). இவர், மதுரை அண்ணாநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஷர்மிளா பானு வைத்திருந்த பேக்கை திருடிக்கொண்டு தப்பி சென்றார். அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் 3 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவை இருந்ததாக அண்ணாநகர் போலீசில் ஷர்மிளா பானு புகார் அளித்துள்ளார்.

இதுபோல் மதுரை மானகிரியை சேர்ந்தவர் நர்மதா (26). இவர் அண்ணாநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த பேக்கை மர்ம நபர் திருடிவிட்டு தப்பி சென்றார். அதில் ஒரு பவுன் நகை மற்றும் ரூ.1350 இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அமளி (42). இவர் மாவட்ட கோர்ட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பை திருடுபோனது. அதில், ரூ.54 ஆயிரத்து 800 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த 3 திருட்டு புகார்கள் குறித்தும், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story