ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு


ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
x

ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை, பணம் திருபோனது

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் உள்ள சவுபாக்கிய நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 75). இவர் ஹார்விப்பட்டியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அந்த வழியாக சென்ற ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினார். அப்போது 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி தனலெட்சுமியின் அருகில் அமர்ந்தனர். இதையடுத்து திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்தில் அந்த 2 பெண்களும் இறங்கி சென்றுவிட்டனர். ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் வந்ததும் ஆட்டோவை விட்டு இறங்கிய தனலெட்கமி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுப்பதற்காக தன் கொண்டு வந்த பைக்குள் இருந்த மணிபர்ஸை திறந்தார்.

அப்போது அவருடைய பர்சை காணவில்லை. அதில் இருந்த 6 கிராமில் ஒரு ஜோடி தோடு, ஒன்றை கிராமில் 2 தங்ககாசு, 1 பவுனில் (2 அரை) மோதிரம், ஒரு பவுன் நகை, ரூ.3 ஆயிரம் மற்றும் ஒரு பட்டன் செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவவை உள்ளே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story