நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கிடந்த 2 பவுன் நகை மீட்பு


நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கிடந்த 2 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கிடந்த 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கிடந்த 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதன்பிறகு ரெயில் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றது. இந்த நிலையில் பயணிகள் இறங்கி சென்ற முதலாவது பிளாட்பாரத்தில் 2 பவுன் நகை கிடந்தது. இதைப் பார்த்த சில பயணிகள் அந்த நகையை மீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் நகைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து நகையை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நகையை தவறவிட்டவர்கள் நகையின் அடையாளங்களை தெரிவித்து பெற்று செல்லுமாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story