மும்பையில் போலி நகைகளை கொடுத்துரூ.7.40 லட்சத்துக்கு புதிய நகை வாங்கி மோசடிசேலம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சேலம்
அன்னதானப்பட்டி
சேலம் தாதகாப்பட்டி, ஜவகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி (வயது 25). கம்ப்யூட்டர் என்ஜினீயர். கடந்த 6-ந் தேதி மும்பை சென்ற நாகமணி, அங்குள்ள நகைக்கடை ஒன்றில் தன்னிடம் உள்ள பழைய தங்க நகைகளை கொடுத்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்திற்கு புதிய நகைகளை வாங்கினார். இதை கடை ஊழியர்கள் அந்த நகையை பரிசோதித்தபோது போலி என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மும்பை பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அன்னதானப்பட்டி பகுதியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து பாந்த்ரா அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நாகமணியை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story