ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை திருடி ெசன்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா மேலத்துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கனியம்மாள் (வயது 63). இவர் காரியாபட்டியில் உள்ள தனது மகள் சாமாயி (40) என்பவரின் வீட்டிற்கு வருவதற்காக மேலத்துலுக்கன்குளம் கிராமத்தில் இருந்து பஸ்சில் கல்குறிச்சி வந்துள்ளார். பின்னர் கல்குறிச்சியில் இருந்து காரியாபட்டிக்கு பஸ்சில் வந்த கனியம்மாள் பஸ் நிலையத்தில் இறங்கி தனது கழுத்தை பார்த்தபோது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை காணாமல் ேபானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாமாயி கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story