தூக்குப்போட்டு நகை தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு நகை தொழிலாளி தற்கொலை
x

குடியாத்தத்தில் தூக்குப்போட்டு நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

குடியாத்தம் போடிப்பேட்டை சி.கே.பி.தெருவை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் என்கிற ஈஸ்வரன் (வயது 63), நகை செய்யும் தொழிலாளி. இவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story