தனியார் வங்கியில் 17 பவுன் நகை மாயம்


தனியார் வங்கியில் 17 பவுன் நகை மாயம்
x

சேலம் மெய்யனூரில் தனியார் வங்கியில் 17 பவுன் நகை மாயமானது குறித்து 2 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மெய்யனூரில் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக சுகுமார் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியில் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் நகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது 17 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி மேலாளர் சுகுமார், பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், வங்கியின் நகைக்கடன் பிரிவில் பணியாற்றி வரும் பிரகாஷ், நூருதீன் ஆகியோரின் பொறுப்பில் தான் லாக்கர் உள்ளது. இதனால் அவர்களுக்கு தெரியாமல் நகைகள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இல்லை. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், வங்கி லாக்கரில் இருந்த நகைகள் மாயமானது தொடர்பாக வங்கி ஊழியர்கள் பிரகாஷ், நூருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story