கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் நகை பறிப்பு
கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் நகை பறிப்பு
மதுரை
மேலூர்
மேலூர் அருகே புதுசுக்காம்பட்டியில் உள்ள அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கும்பல் ஒன்று பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது. புதுசுக்காம்படியை சேர்ந்த மனோரஞ்சிதம்(வயது 62) என்பவரிடம் 3¼ பவுன் தங்க சங்கிலியையும், அதே ஊரை சேர்ந்த தங்கமலர் (62) என்பவரிடம் 2½ பவுன் தங்க சங்கிலியையும், முத்துவேல்படியை சேர்ந்த பாண்டியம்மாள் (45) என்பவரிடம் 2 பவுன் சங்கிலியையும் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story