திண்டிவனத்தில்வியாபாரியிடம் நகை அபேஸ்


திண்டிவனத்தில்வியாபாரியிடம் நகை அபேஸ்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் வியாபாரியிடம் நகைையை மா்ம நபா் அபேஸ் செய்து சென்றுவிட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் மயிலம் ரோடு கற்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 72). இவர் திண்டிவனம் பழைய இந்திரா காந்தி பஸ் நிறுத்தத்தில் பங்க் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த 3 நாட்களாக ஒருவர் வந்து, கதிர்வேலிடம் பேசிவந்தார். அப்போது, அவர் தான் பைனான்ஸ் தொழில் செய்வதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் கதிர்வேல் அணிந்திருந்த 2½ பவுன் தங்க மோதிரத்தை பார்த்த அந்த நபர், அழகாக இருப்பதாக கூறி அதனை போட்டு பார்த்துவிட்டு தருவதாக வாங்கி உள்ளார்.

அந்த நேரத்தில் கடையில் கதிர்வேல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மோதிரத்துடன் அந்த நபர் மாயமாகி விட்டார். தொடர்ந்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் தன்னை அந்த நபர் ஏமாற்றி தங்க மோதிரத்தை அபேஸ் செய்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திண்டிவனம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story