பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது


பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது
x

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 61). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டதால் வாசல் கதவை அடைக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சுப்புலட்சுமியின் மகன் பாலசுப்பிரமணியன் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், சுப்புலட்சுமியிடம் நகை பறித்தது பொத்தை வைராவிகுளத்தை சேர்ந்த பூதப்பாண்டி (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பூதப்பாண்டியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.


Next Story