நகை கடை ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகை கடை ஊழியர் பலியானார்.
நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் செந்தூரபாண்டி (வயது 32). இவர், நிலக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரும், தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த காளிதாஸ் (வயது 24) என்பவரும் நிலக்கோட்டையில் இருந்து ேதாப்புப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
நிலக்கோட்டை அருகே பெரியகுளம்-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கொடைக்கானலில் இருந்து வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செந்தூரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட காளிதாசுக்கு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.