மருத்துவ மாணவியிடம் நகை திருட்டு
மருத்துவ மாணவியிடம் நகை திருடப்பட்டது.
திருநெல்வேலி
திண்டுக்கல்லை சேர்ந்தவர் டாக்டர் மேனகா (வயது 29). இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தனது ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். அதில் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் 2 தங்க வளையல்கள், 1 தங்க மோதிரம் ஆகியவற்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை இருக்கையை உடைத்து மர்ம நபர்கள் நைசாக திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து மேனகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story