பணித்தள பொறுப்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும்


பணித்தள பொறுப்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும்
x

பணித்தள பொறுப்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

100 நாள்வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழுவின் கூட்டம், திருச்சிற்றம்பலம் அருகே ஆவணத்தில் அமைந்துள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். ்கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாலா, பாக்கியம், ராஜலெட்சுமி, ரேவதி, ராஜப்ரியா, அமிர்தவள்ளி, நவநீதம், சங்கவி, அண்ணாதுரை, சுந்தர், துரைமாணிக்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும்

கூட்டத்தில், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி பேசுகையில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பணிகளை வெளிப்படையாகவும், கலந்தாலோசித்தும் செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களுக்கு, சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையை முறைப்படுத்தி, தேவையான பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

கோரிக்கைகள்

ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும். ஒன்றியத்தில் நடைபெறும் பணிகள் நிறைவேற ஒத்துழைப்பு அளித்து வரும் உறுப்பினர்களுக்கும். அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

கூட்டத்தில் நிர்வாக செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.


Next Story