வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம்
விருதுநகரில் வருவாய் துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் வருவாய் துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய்துறை அலுவலர்களுக்கான கடந்த மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வு கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்ட தாசில்தார்களில் சாத்தூர் வெங்கடேசன் முதல் பரிசும், ராஜபாளையம் ராமச்சந்திரன் 2-ம் பரிசும், லெம்பக்கோட்டை ரங்கநாதன் 3-ம் பரிசும் பெற்றனர். தனி தாசில்தார்களில் சிறப்பாக பணியாற்றிய ஸ்ரீவில்லிபுத்தூர் ராம்தாஸ் முதல் பரிசும், சாத்தூர் சீதாலட்சுமி 2-ம் பரிசும், ராஜபாளையம் சரஸ்வதி 3-ம் பரிசும் பெற்றனர்.
காரியாபட்டி
பட்டா மாறுதல் மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணைத்தாசில்தார்களில் திருச்சுழி சரவணகுமார் முதல் பரிசும், சாத்தூர் ராஜாமணி 2-ம் பரிசும், காரியாபட்டி அழகு பிள்ளை 3-ம் பரிசும் பெற்றனர்.
உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை மாரிமுத்து முதல் பரிசும், விருதுநகர் அரவிந்தன் 2-ம் பரிசும், சாத்தூர் தங்கபாண்டியன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமசுப்பு ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர்.
கள ஆய்வு
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்ளை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி சுரேஷ் முதல் பரிசும், விருதுநகர் பாண்டி செல்வி 2-ம் பரிசும், விருதுநகர் முத்துமாரி 3-ம் பரிசினையும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கோட்டாட்சியர்கள் சிவகாசி விஸ்வநாதன், சாத்தூர் அனிதா, அருப்புக்கோட்டை கல்யாண் குமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.