மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்


மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்; கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆசிப்இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் பெண்களுக்காக புதிய சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற திட்டம் இந்த நிதியாண்டு முதல் அஞ்சல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எவ்வித வயது வரம்புமின்றி சேரலாம். குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி கூட்டுவட்டியாக காலாண்டிற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும்போது வழங்கப்படும். இந்த திட்டத்தில் மார்ச் 2025-ம் ஆண்டு வரை மட்டுமே சேரமுடியும். எனவே இத்திட்டத்தில் அனைத்து பெண்களும் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story