ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை இணை இயக்குனர் ஆய்வு
பேரணாம்பட்டில் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி தயாரித்து வழங்க எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பொது சமையல் கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த பணியினை நகராட்சிகள் இணை இயக்குனர் பாரி ஜாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் இங்கிருந்து எத்தனை பள்ளிகளுக்கு சிற்றுண்டி உணவு தயாரிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட உள்ளது என கேட்டார்.
அதற்கு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, மொத்தம் 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் தற்போது 4 பள்ளிகளான எம்.ஜி.ஆர்.நகர் ஒன்றிய தொடக்க பள்ளி, பேரணாம்பட்டு செக்குமேடு ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி, தரைக்காடு உருது ெதாடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு சிற்றுண்டி உணவு தயாரிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
அப்போது நகராட்சி துணைத்தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான ஆலியார்ஜூபேர் அஹம்மத், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.