விருத்தாசலம் வட்டார உளுந்து விதைப்பண்ணையை வேளாண் இணை இயக்குனா் ஆய்வு


விருத்தாசலம் வட்டார உளுந்து விதைப்பண்ணையை வேளாண் இணை இயக்குனா் ஆய்வு
x

விருத்தாசலம் வட்டார உளுந்து விதைப்பண்ணையை வேளாண் இணை இயக்குனா் ஆய்வு செய்தாா்.

கடலூர்

விருத்தாசலம்,

தமிழ்நாடு அரசு, வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் மண்வளத்தை காக்க நெல் சாகுபடிக்குப்பின் பயறுவகை பயிர்கள் சாகுபடி என்ற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான விதைகள் உற்பத்தி செய்ய செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு கடலூர் மாவட்ட காவேரி டெல்டா பகுதிக்கு தேவையான 1,200 மெட்ரிக் டன் விதைகளை கொள்முதல் செய்ய விருத்தாசலம் வட்டாரத்தில் விதைப்பண்ணைகள் கடந்த அக்டோபர் மாதத்தில் அமைக்கப்பட்டது. தற்போது முதிர்ச்சி மற்றும் அறுவடை நிலையில் உள்ள உளுந்து விதைப்பண்ணைகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா, துணை இயக்குநர்(மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது விதை பண்ணையில் நோய் தாக்கம் ஏதேனும் இருக்கிறதா? சத்து பற்றாக்குறைகள் உளுந்து பயிரில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் விதை பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட மேலாண் மை முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது விருத்தாசலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார், துணை வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும் போது, விதை பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விதைகள் சிறப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடிக்கு பின் பயறு வகைகள் சாகுபடி செய்வதற்காக உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story