சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு


சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினமும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாத்திரைகள் இருப்பு உள்ளதா எனவும் ஸ்கேன் மையத்தையும், சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அதன்பிறகு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர் பாலகிருஷ்ணன், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story