இணைப்பு சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும்


இணைப்பு சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும்
x

வலங்கைமான் அருகே இணைப்பு சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

வலங்கைமான்

வலங்கைமான் அருகே இணைப்பு சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

பாலம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வீராணம் ஊராட்சியை சேர்ந்த படப்பகுடி கிராம ஆதிதிராவிடர் தெரு, வடக்கு பட்டம் திருக்கருக்காவூர் ரோட்டின் அருகில் அமைந்துள்ளது. இந்த ரோட்டின் அருகில் செல்லும் வாய்க்காலின் மீது குறுக்காக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக இந்த தெருவுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சேதம்

பள்ளி கல்லூரிகளுக்கும், வலங்கைமான் பகுதி அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதற்கு, இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. கிராம மக்கள் வாகனங்களில் சென்று வருவதற்கு அத்தியாவசியமாக இருந்துவந்த பாலம், தற்போது சேதமடைந்துள்ளதுடன் பாலத்தின் இரு புற பகுதி தடுப்புச் சுவர்கள் கீழே விழுந்துள்ளது. மழைநீர் அரிப்பால் பாலத்தின் முகப்பு ஒற்றையடி பாதையாக மாறிவிட்டது.இந்த பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெல் மூட்டை ஏற்றிச்சென்ற டிராக்டர் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. எனவே இந்த இணைப்பு சாலை மற்றும் பாலத்தை சீரமைப்பதுடன், வாய்க்கால் பகுதியில் உள்ள தடுப்புச்சுவரையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story