ரூ.41.98 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்


ரூ.41.98 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்
x

காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஒன்றியங்களுக்கான ரூ.41.98 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஒன்றியங்களுக்கான ரூ.41.98 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சி பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.41.98 கோடி மதிப்பீட்டில் காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் செம்பேடு ஊராட்சி மற்றும் 88 குக்கிராமப் பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டபணிக்கு பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

காவேரிப்பாக்கம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த செம்பேடு மற்றும் 88 குக்கிராமங்களில் தற்போது ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.41.98 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒரு வருடத்தில்

இந்த திட்டத்தின் மூலம் திருப்பாற்கடல் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சி பாலாற்றில் புதியதாக 5 நீர் உறிஞ்சு கிணறுகளை நீராதாரமாக அமைத்து அவற்றிலிருந்து பெறப்படும் குடிநீரை புதிதாக அமைக்கப்படவுள்ள 1.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து, அங்கிருந்து இரும்பு குழாய்கள் மூலம் 19.80 கி.மீ. தூரத்திற்கு நீர் உந்தப்பட்டு ஆயல் பகுதியில் அமைக்கப்பட உள்ள 1.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும்.

பின்னர் இங்கிருந்து சூரை, நந்திமங்கலம், ஆயல், பாணாவரம், செம்பேடு, மின்னல், வேடல், குன்னத்தூர், தப்பூர், பழையபாளையம், போளிப்பாக்கம் ஊராட்சிகளில் அமைக்கப்பட உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படும். இந்த தண்ணீர் 108 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு மக்களுக்கு குடிநீர்வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணி அடுத்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற் பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் சுபவாணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சக்தி, தாசில்தார் சுமதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானமணி, ஊராட்சி மன்றத் தலைவர் மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story