ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்


ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
x

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர். இதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் கலா ஆஞ்சி, சிவப்பிரகாசம், உமா கண்ரங்கம், கே. ஜி.சரவணன், மணிகண்டன் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் பேசுகையில் ஒன்றிய கவுன்சிலர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும், மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கு ஏற்ப பணிகளைப் பிரித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி வளர்ச்சி பணிகளை அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்துவோம் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், மேலாளர் ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story