அகழ்வாராய்ச்சி பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு


அகழ்வாராய்ச்சி பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
x

அகழ்வாராய்ச்சி பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மட்டுமல்லாமல் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டு அதிலிருந்து கண்ணாடி பாசி மணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், செங்கல் சுவர்கள், சுடுமண் உறைகிணறு உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கொந்தகையில் 4 குழிகள் தோண்டப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் அகரத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டு நத்தை ஓடுகள், சேதமுற்ற பானைகள், உறைகிணறுகள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பிரகாஷ், சுந்தர், ஹேமலதா, தாரணி, சந்திரசேகர், நிர்மல்குமார், விஜயகுமார், ஸ்ரீமதி ஆகிய நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கீழடி மற்றும் கொந்தகை பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு அதுகுறித்த தகவலை தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், கீழடி இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.


Next Story