குடியாத்தம் வீரர் 4 தங்கம் வென்று சாதனை


குடியாத்தம் வீரர்   4 தங்கம் வென்று சாதனை
x

கேரளாவில் நடந்த வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் வீரர் 4 தங்கம் வென்று சாதனை படைத்தார்.

வேலூர்

குடியாத்தம்

கேரளாவில் நடந்த வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் வீரர் 4 தங்கம் வென்று சாதனை படைத்தார்.

குடியாத்தம் தாலுகா சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.மூர்த்தி. ஆசிய வலுதூக்கும் வீரர், இவரது மகன் எம்.ஜெய மாருதி (வயது 17) வேலூர் வி.ஐ.டி.யில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். தந்தையைப் போலவே ஜெய மாருதியும் வலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் எம்.ஜெயமாருதி 74 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டார்.

இதில் ஸ்குவாட் பிரிவில் 207.5 கிலோ எடை தூக்கி தேசிய சாதனை நிகழ்த்தி தங்க பதக்கம் வென்றார். மேலும் பெஞ்ச்பிரஸ் பிரிவில் 105 கிலோ எடை தூக்கி தங்க பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 253 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கமும் வென்றார். இவை உள்பட ஒட்டுமொத்தமாக 565.5 கிலோ எடை தூக்கியதற்கும் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்ததோடு இந்தியாவின் சிறந்த சப்-ஜூனியர் வலுதூக்கும் வீரர் என்ற பட்டத்தையும் வென்றார்.

நான்கு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஜெய மாருதியை குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாநில வலுதூக்கும் சங்க செயலாளர் எஸ். நாகராஜன், மாநில துணை செயலாளர் வி. லோகநாதன் உள்பட சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.


Next Story