ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி


ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி
x

ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

திருச்சி

ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஜூனியர் பேட்மிண்டன் போட்டி

திருச்சி ஜமால்முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் (ஜே.பி.எல். சீசன்-2) போட்டிகள் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது.

இதில் `ஏ' பிரிவில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், விருதை வேங்கைஸ், தஞ்சை தலைவாஸ், திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணிகளும். `பி' பிரிவில் திருச்சி தமிழ் வீராஸ், ரெயின்போ ராக்கர்ஸ், கோவை சூப்பர்கிங்ஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடி வருகிறது.

திருச்சி தமிழ் வீராஸ்

நேற்று `ஏ' பிரிவில் விருதை வேங்கைஸ் அணி திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் விருதை வேங்கைஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணியை வென்றது. பின்னர் `பி' பிரிவில் திருச்சி தமிழ் வீராஸ் - ரெயின்போ ராக்கர்ஸ் அணிகள் மோதின. இதில் 4-1 என்ற செட் கணக்கில் திருச்சி தமிழ் வீராஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல் கோவை சூப்பர்கிங்ஸ் - மதுரை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் திருச்சி தமிழ் வீராஸ், மதுரை இந்தியன்ஸ், விருதை வேங்கைஸ் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

ரூ.70 லட்சம் பரிசு

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.


Next Story