சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்


சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
x

கொள்ளிடம் ஆற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டு படுகை, குத்தவக்கரை, சந்தபடுகை, திட்டுபடுகை, அளக்குடி, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவைகள் மிக ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. எனவே இந்த மரங்கள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த மரங்களிலிருந்து விழும் கிளைகளில் முட்கள் நிறைந்துள்ளதால் சில தினங்களில் காய்ந்து காற்றில் பறந்து ஆற்றுப்பகுதியில் செல்பவர்கள் காலில் குத்துகிறது. மேலும் கால்நடைகளுக்கும் கால்களில் குத்துவதால் அவதி அடைந்து வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் சுகாதாரமும் சீர்கெடுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மக்களுக்கு பயன்தரும் மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story