காளான் வளர்க்க 50 சதவீத மானியம்


காளான் வளர்க்க 50 சதவீத மானியம்
x
திருப்பூர்


தாராபுரம் வட்டாரத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 50சதவீத மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் எஸ்.வித்தியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு என்பது ஒரு சுயதொழில் வேலைவாய்ப்பு. இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தருகிறது. நம் நாட்டில் ஆண்டுதோறும் அதிக அளவில் பண்ணைக் கழிவுகள் கிடைக்கின்றது. இதில் ஓரளவு மட்டுமே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன.

காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது. பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். காளான் எடுத்த பின்பு உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம். புரதம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம்.

50 சதவீதம் மானியம்

சிறு தொழில்கள் இனத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட கவுண்டச்சிபுதூர், நல்லமபாளையம், பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மணிகண்டன்- 7338726839, கனகராஜ்- 9976267323 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story