சூழவாய்க்காலில் கபடி போட்டி
சூழவாய்க்காலில் கபடி போட்டி நடைபெற்றது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள சூழவாய்க்காலில் இந்து காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் முதலிடம் வெற்றி பெற்ற சூழவாய்க்கால் சிவந்தமண் அணிக்கு வெற்றி சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம், 3-வது இடம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் காந்தி, இந்து காட்டுநாயக்கன் சமுதாய சங்க தலைவர் மாயாண்டி, கவுரவ ஆலோசகர் சூசையப்பர், செயலர் மிக்கேல், பொருளாளர் முருகன், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.