மதுரை மண்டல அளவிலான கபடி போட்டி
மதுரை மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
சிவகாசி,
இண்டர் பாலிடெக்னிக் கல்லூரி அத்தலெடிக் அசோசியேசன் சார்பில் மதுரை மண்டல அளவிலான கபடி போட்டி சிவகாசி அரசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 24 பாலிடெக்னிக் கல்லூரிகள் கலந்து கொண்டன. போட்டியை கல்லூரியின் நூலகர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். போட்டியின் இறுதி ஆட்டத்தில் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகர்கோவில் ஜி.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியும் மோதின. இதில் அழகர்கோவில் ஜி.எஸ்.எம். கல்லூரி வெற்றி பெற்றது. 2-வது பரிசு அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கும், 3-வது பரிசு வாடிப்பட்டி தாய் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், 4-வது பரிசு மதுரை லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரியின் கல்வி அதிகாரி புகழ் கோப்பைகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மதனகோபால் செய்திருந்தார்.