கபடி போட்டி


கபடி போட்டி
x

நாம் தமிழர் கட்சி சார்பில் கபடி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காரியாண்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 42 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் கூடங்குளம் அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். 2-ம் பரிசை டோனாவூர் அணியினரும், 3-ம் பரிசை பார்பரம்மாள்புரம் அணியினரும், 4-ம் பரிசை நாங்குநேரி அணியினரும் வென்றனர்.

ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி நாங்குநேரி தொகுதி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அந்தோணி விஜய், இணைச்செயலாளர் வீரபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story