திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்கல்லூரியில்பெண்களுக்கான கபடி போட்டி; புதுக்கோட்டை அணி முதலிடம்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்த மாணவிகளுக்கான கபடி போட்டியில் புதுக்கோட்டை கல்லூரி அணி முதலிடம் பிடித்து பரிசுக்கோப்பையை தட்டிசென்றது. வாலிபால் போட்டியில் சேலம் அணி பரிசுக்கோப்பையை தட்டி சென்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்த மாணவிகளுக்கான கபடி போட்டியில் புதுக்கோட்டை கல்லூரி அணி முதலிடம் பிடித்து பரிசுக்கோப்பையை தட்டிசென்றது. வாலிபால் போட்டியில் சேலம் அணி பரிசுக்கோப்பையை தட்டி சென்றது.
பெண்களுக்கான போட்டி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான
கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. போட்டிகளை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன. இதில், புதுக்கோட்டை அன்னை தெரசா உடற்கல்வியியல் கல்லூரி முதல் இடத்தையும், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், கரூர் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி அணி 3-வது இடத்தையும் பெற்றன.
வாலிபால் போட்டி
பின்னர் நடந்த பெண்களுக்கான வாலிபால் போட்டியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் சேலம் ஸ்ரீ சாரதா உடற்கல்வியியல் கல்லூரியும் முதல் இடத்தையும், தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், விழுப்புரம் மாஸ் உடற்கல்வியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழா
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். இந்த போட்டி அறிக்கையினை ஆபிரகாம் சாம்சன் வாசித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை விளையாட்டு ஒருங்கிணைப்பாளரும், பார்வையாளருமான உதவி பேராசிரியர் வேல்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். சிறப்பு விருந்தினருக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் நெல்சன்துரை பொன்னாடை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் கணேஷ் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி இணை பேராசியை தனலெட்சுமி நன்றி கூறினார்.