புதுநிலைபட்டியில் கபடி போட்டி
புதுநிலைபட்டியில் கபடி போட்டி நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம், புதுநிலைபட்டி கிராமத்தில் கண்ணுடையார் குருத்துடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவினை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை புதுநிலைவயல் ஊராட்சி மன்ற தலைவர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். போட்டியில் பெருமாநாடு, மணப்பாறை, தஞ்சாவூர், திருப்பத்தூர், காரைக்குடி, கொத்தமங்கலம், கே. புதுப்பட்டி, கல்லூர், அரிமளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு ரூ.15,001-ஐ மீனிகந்தா அணியினரும், இரண்டாம் பரிசு ரூ.10,001-ஐ கே.புதுப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசு ரூ.8,001-ஐ அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி அணியினரும், நான்காம் பரிசு ரூ.6,001 புதுநிலைபட்டி அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. கபடி போட்டியில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு கோப்பை மற்றும் ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை புதுநிலைபட்டி ஊரார்கள், அம்பலக்காரர்கள், இளைஞர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் பொதுமக்கள் செய்து இருந்தனர்.