இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்;பிரதமருக்கு, இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை
இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
1973-ம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு கச்சத்தீவு பகுதியை தாரை வார்த்தது. அப்போது இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கலாம், வலைகளை உளர்த்தி ஓய்வெடுக்கலாம், அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தலாம் என ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதால், இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய கடலில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்தது. அப்போது மத்திய அரசு இலங்கைக்கு கண்டனத்தை தெரிவித்தது. இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் இனி இந்திய மீன்பிடி தொழிலாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு கூறியது. ஆனால் மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் என தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் உள்ளது. எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே இந்திய மீன்பிடி தொழில் மீதான இலங்கை அரசின் தொடர் அத்துமீறல் அடாவடிதனத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.