கச்சிகுடா-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தம்


கச்சிகுடா-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:28 AM IST (Updated: 10 Jun 2023 11:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரை வழியாக இயக்கப்படும் கச்சிகுடா-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்படுகிறது.

மதுரை

மதுரை,

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் என்ஜினீயரிங் பணிகள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கச்சிக்குடாவில் இருந்து வருகிற 23-ந் தேதி மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.07435) நெல்லை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.07436) வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டு கச்சிகுடா செல்லும். இதற்கிடையே, கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ஹவுரா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) இயக்க காரணங்களுக்காக நேற்று திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

இதனால் இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அந்த பயணிகளுக்கான முன்பதிவு கட்டணம் அந்தந்த ரெயில் நிலையங்களில் முழுமையாக திரும்ப வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story