கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்


கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறையில் கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

தேனி

மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சேகரன், ஒன்றிய ஆணையர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணையர் பதிலளித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், ஒன்றிய மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story