கடம்பவனேசுவரர் கோவில் ஆடிப்பூர திருவிழா
கடம்பவனேசுவரர் கோவில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது.
குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் ஆடிப்பூர ெபருந்திருவிழாவையொட்டி கடந்த 23-ந்தேதி விக்னேசுவரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இக்கோவிலில் உள்ள அம்பாள் கொடிகம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவருகிறது. அதுபோல் நேற்று முதல் காலையில் பல்லக்கிலும், மாலையில் மஞ்சள் கேடயம், யாளி, அன்னம், தாமரை உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாயொட்டி நேற்று இரவு யாளி வாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள் யாளி வாகனத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றியுள்ள 4 வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் ஆடிப்பூர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெற உள்ளது.