தஞ்சை அருகேஆற்றில் மூழ்கி இறந்த 6பேர்குடும்பத்தினருக்கு கடம்பூர்ராஜூஎம்.எல்.ஏ.ஆறுதல்
தஞ்சை அருகேஆற்றில் மூழ்கி இறந்த 6பேர்குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை கடம்பூர்ராஜூஎம்.எல்.ஏ.ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடிஅருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்துக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றனர். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது, 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று மாலையில் சிலுவைப்பட்டிக்கு வந்தார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கூறும் போது, சிலுவைப்பட்டியை சேர்ந்த 6 பேர் ஆற்றில் குளித்த போது இறந்து உள்ளனர். ஆற்றில் ஆழமான பகுதி என்பதை அறிவிக்கும் வகையில் அரசு அறிவிப்பு பலகை வைக்காமல் மெத்தனமாக இருந்து உள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அல்லது தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ளுவது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.