கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது.
தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நியமனக்குழு, வேளாண்மை உற்பத்திக்குழு, கல்விக்குழு, பொது நியமனக்குழு ஆகியவை அமைப்பது, வளர்ச்சி பணிகள், வரவு, செலவுகள் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு ஒன்றிய குழுத்தலைவர் செல்வராஜ் பதிலளித்து கூறுகையில், மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தரப்படும். ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவிக்கும் மற்ற கோரிக்கைகளையும், ஒன்றிய நிர்வாகம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு தகுதி உடைய அனைத்து பணிகளும் நிறைவேற்றி தரப்படும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.