கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்


கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
x

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை மற்றும் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உபகரணங்களை இயக்கி பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன், மருத்துவர்கள் சரவணக்குமார், மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story