மாநில சிலம்பாட்ட போட்டிக்கு கடையநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


மாநில சிலம்பாட்ட போட்டிக்கு கடையநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
x

மாநில சிலம்பாட்ட போட்டிக்கு கடையநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மிக மூத்தோர் பிரிவில் கலந்துகொண்ட கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அனைத்து மாணவர்களும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மிக மூத்தோர்களுக்கான விளையாட்டு போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் முருகேசன் முதலிடத்தையும், 55 கிலோவிற்கான எடைப்பிரிவில் மாணவர் சுகுமாறன் முதலிடத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் பரமசிவன் முதலிடத்தையும், 70 கிலோவிற்கான எடைப்பிரிவில் மாணவர் மதன் குமார் முதலிடத்தையும், 70 கிலோவிற்கு மேல் உள்ள எடைப்பிரிவில் கணேசன் முதலிடத்தையும் பெற்றனர்

மூத்தவர்களுக்கான போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பெற்றார். 60 கிலோவிற்கான எடைப்பிரிவில் மாணவர் சந்தோஷ் 2-ம் இடமும், ஒற்றைக்கம்பு வீச்சுப்போட்டியில் மாணவர் கரண் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இளையோருக்கான சிலம்ப போட்டியில் 40 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முப்புடாதி 2-ம் இடத்தையும், இரட்டைக் கம்பு வீச்சில் மாணவர் பரதன் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் 2023 ஆண்டு ஜனவரி மாதம் அரியலூரில் நடைபெறும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் பதக்கம் அணிவித்து பாராட்டினார். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் மங்களத்துரை மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.


Next Story