கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்
கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2-ந் தேதி அம்பாள் தீர்த்த உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் கும்பஜெபம், ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதிஉலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் தேரோட்டம் நடந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நியூ பஜார், மெயின் பஜார், தேசிய நெடுஞ்சாலை, முப்புடாதி அம்மன் கோவில் தெரு வழியாக சென்று தேர் நிலையத்தை அடைந்தது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்தில் கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், பண்பொழி, திருமலைகோவில், அச்சன்புதூர், செங்கோட்டை என பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.