கடையநல்லூர் யூனியன் கூட்டம்


கடையநல்லூர் யூனியன் கூட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது. யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் சுப்பிரமணியன், ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிங்கிலிபட்டி மணிகண்டன் பேசும்போது, சிங்கிலிபட்டி - சுந்தரேசபுரம் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கிலிபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், என்றார்.

அருணாசல பாண்டியன் பேசும்ே்பாது, ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது போல் கடையநல்லூர் யூனியன் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்றார்.

கவுன்சிலர்கள் சித்ரா கண்ணன், பகவதியப்பன், சண்முகையா, மாரியம்மாள், மாரிச்செல்வி, ரோஜாமுருகன், சத்யகலா தீபக் ஆகியோர் தங்களுடைய வார்டு குறைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 16 தீர்மானங்களில், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டி வைக்கப்பட்ட 3 தீர்மானங்கள் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story