ககன்யான் திட்ட கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி


ககன்யான் திட்ட கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
x

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்ட கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றது.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் தயார் செய்யப்பட்டு பல்வேறுகட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சி.இ.-20 என்ற கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நேற்று நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 670 வினாடிகள் முழு வகையிலான அளவில் வெற்றிகரமாக என்ஜின் இயக்கப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடந்தது. ககன்யான் விண்வெளி திட்டத்தில் 20 டன் எடை அளவில் உந்தும சக்தி அளிக்கும் வகையில் எல்.எம்.வி.-3 ராக்கெட்டின் கிரையோெஜனிக் என்ஜின் கடந்த மாதம் பரிசோதிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 டன் சேர்த்து 22 டன் அளவு உந்தும சக்தி அளிக்கும் வகையில் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ராக்கெட்டின் உந்துமசக்தி, வெப்பம் தாங்கும் சக்தி உள்ளிட்ட காரணிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரோ மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story