கைலாசநாத சுவாமி கோவில் தெப்பத் திருவிழா


கைலாசநாத சுவாமி கோவில் தெப்பத் திருவிழா
x

வடக்கு அரியநாயகிபுரம் கைலாசநாத சுவாமி கோவில் தெப்பத் திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் அரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

10-ம் நாளான நேற்று முன்தினம் தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு வைரவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, ரிஷப வாகனத்தில் சுவாமி அழைத்து வருதல், இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து இரவில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


Next Story